பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கோழி வளர்ப்பதைத் தடை செய்வதற்குச்

சட்டம் கொண்டுவராத

சட்டமன்றத்தையும் சாடுகிறாள் அவள்”

-என்றான் அவன்.

  • அப்படியா? அப்பெண்ணின் நல்லாளுக்கு என் வாழ்த் துக்கள்! எங்கே! அந்தப் பாட்டு தேனட்ையை என் காதில் சற்றுப் பிழியுங்களேன்' என்று ஆவலோடு கேட்டாள் அந்தக் கொடிமுல்லை,

அவன் பாடினான்.

சட்டமன்றம் கோழி

வளரிப்பதைத் தடைசெய்யுமா?

தொட்டார்கை தொட்டுச்

சுவைக் குமுன்-பட்டப்

பகலாயிற் றென்று

பறையடிக்கும் சற்றும்

அகலார் அகலும் படிக்கு.

ஆகா பெண்ணின் உணர்வுகளைப் பாவேந்தர் எவ்வளவு நுட்பமாகப் பாடியிருக்கிறார்! அத்தான், எனக் கோர் ஐயம்! இக்காதல் ஆற்ற மை யுணர்வைப் புலப் படுத்துவதில் நம் நாட்டுப் பெண்கள் மிகவும் நுட்பமானவர் கள். மற்ற நாட்டுப் பெண்கள் எப்படி?" என்று கேட்டாள் அந்த நளின மலர்.

காதல் உணர்வைப்புலப்படுத்துவதில் எல்லா நாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதான். காதல் வானில் களங்கமற்ற நிலவாகக் காட்சி தரும் ஜூலியத் ஒர் இத்தாலியக் கொத்துமலர். பத்தும் நான்கும் கூடிய பருவப்படிகளைத் தாண்டிய உருவப் பளிங்குச் சிலை. காதலன் ரோமியோ வோடு காரிரவுக் கரும்பைச் சுவைத்து மென்று கொண்டி