உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

hollow of thine ear; Nightly she sings cn yon pomegranate trCՅ:

Believe me, love, it was the nightingele

—[Shakespears's Romeo and Juliet.]

அடுத்தநாள் காலை மணி பத்திருக்கும். அவன் வெள்ளை உடையுடுத்தி வீதியுலாச் செல்லுகிறான் அலுவலகம் நோக்கி. நிமிர்ந்த அவன் நடையழைகைத் தன் கண்களால் தின்னத் தொடங்கினாள் அவள்.

தெருக்கோடி அவள் திருவுருவை மறைத்ததும் திகைத் தவளாய்த் திரும்பினாள். ைக ப் பி டி ச் சுவருக்கு அப்பாலிருந்து அலர்மேலு: தன் அல்லி விழிகளால், அவளை அளந்து கொண்டிருந்தாள்.

கண்களில் குறும்பு!

புன்னகையில் கேலி!

"இந்த ஆடவர்களே இப்படித்தான்.போனால் போன இடம்...வந்தால் வந்த இடம். வாட்டும் இந்த முறை எளிதில் மசியப் போவதில்லை...முகங்கொடுத்துப் பேசப்போவதில்லை, இந்த வெண்ணெய் வேதாந்த மெல்லாம் கணவன் சூடு பட்டதும் உருகி, ஒடிவிட்டதோ? ஏண்டி! என்ன...இரவெல்லாம் விளக்கு...' என்று ஊசிச்

சொற்களால் குத்தினாள் அலர்மேலு.

முகத்தில் படர்ந்த நாண மின்னல்களைக் கையால் ஒதுக்கிக் கொண்டு, "போடி! உன் குறும்பு! ஒழிக்! நான் என்னடி செய்யட்டும்? என் வெட்கங்கெட்ட பொல்லாத கால்கள் அவரைத் தொலைவில் கண்டதும் என்னைத்