60
சில புலவர்கள் ஒப்பிட்டுப் பாடுகிறார்கள். அவர்களை நான் மடையர்கள் என்று சொல்லுவேன். என்னைப் பாடச் செர்ன்னால் அந்த மலர்கள் எல்லாம் பெண்களல் கண் முன்னால் சருகுகள்’ என்றுதான் பாடுவேன்' என்று உணர்ச்சி வயப்பட்டுப் பேசினான் அவன்.
- அப்படி யென்றால் தூக்கக் கலக்கத்தில் எழுந்த ஒரு பெண்ணின் சாறுபடிந்த விழிகளை
பாதி திறந்த கோதையின் விழியோ பலகறை நடுவில் பதிந்த கோடு
என்று இருண்ட வீட்டில் பாடிய பாவேந்தரை நீங்கள் துரக்கு மேடைக்கு அனுப்பிவிடுவீர்கள் போலிருக்கிறதே" என்று கூறிப் புன்னகை செய்தாள் அப்பூங்கொடி.
• நான் பேசுவது பெண்ணின் விழியைப்பற்றி; இருண்ட வீட்டில் வருபவள் பெண்ணா?' என்று கேட்டான் அவன்.
'நீங்கள் கண்ணை எப்படி வேண்டுமானாலும் பாராட்டிக் கொள்ளுங்கள். என்னைப் பொருத்த வரையில் முகத்திலிருக்கும் என் கண்கள், எனக்குக் கொடிய பகைவர்கள். இந்த எட்டு நாட்களாக அவை என்னைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல' என்று கூறிப் பெருமூச்சு விட்டாள். அவள்.
ஏன்?" என்று வியப்போடு கேட்டான் ೫೧/ಿ
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவை இரவும் பகலும் அழுது கொண்டே இருந்தன என்றாள் அவள்.
ஏேன் அழவேண்டும்?" என்றான் அவன்.
குறும்புதான். நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்கள் அழகை அணுஅனுவாகச் சுவைத்து மகிழ்ந்த