பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I

இப்பாழும் கண்கள், நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களைக் காண ஏங்கி ஏங்கி அழுகின்றன. உங்களைப் பார்ப் பானேன்? பின்னர் அழுவானேன்? இக்கண்களின் செயலை நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.’ என்றாள் அவள்,

"உனக்கு மட்டுமல்ல! வள்ளுவருக்குந்தான்! இல்லை யென்றால் -

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து-1173

என்று பாடுவாரா?” என்று விளக்கினான் அவன்.

"இவை அழுது தொலைத் தால் கூட எனக்குக் கவலை இல்லை. என்னைத் தொல்லைப் படுத்தாமல் இருக்கக் கூடாதா?’ என்றாள் அவள்.

  • உனக்கென்ன தொல்லை?" என்று கேட்டான் அவன்

"இவை அழுது அழுது என்னைத் துரங்க விடாமல், அடிக்கின்றன!" என்றாள் அவள்.

கண்ணின் பண்பே அதுதான். இக்கண் துன்பக் காலத்தில் மட்டுமல்ல; இன்பத்திலும் அப்படித்தான். காதலன் பிரிந்திருந்தாலும் இவை துரங்குவதில்லை; காதலன் அருகிலிருந்தாலும் தூங்குவதில்லை. அதனால் தான் வள்ளுவர்

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் 3 7 1 1 دسم என்று பாடுகிறார்' என்றான் அவன்

"ஆமாம்! கண்கள் காரிகையரின் உயிரை வாங்கும் கொடியவர்கள்' என்றாள் அவள்.