பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அக்கண்கள் உங்களை மட்டுமா உயிரை வாங்கு கின்றன? எங்களையும்தான். அதனால்தான் கண்டார் உயிருண்ணும் கண்" என்றார் வள்ளுவப் பெருமான். இன்னும் சொல்லப் போனால் இந்தக்கண்களின் பசி புதுமை யானது. இவை ஆடவரிகளின் உடலை உண்பதோடு அமைவதில்லை: ஆடவர்களின் கண்களையும் விரும்பி உண் கின்றன" என்று கூறி நிறுத்தினான் அவன்.

"அப்படியா?" என்று ஆவலோடு கேட்டாள் அவள்.

சீதையின் கண்கள் இராமனின் கண்களைக் கல்வி உண் டதை நீ படித்ததில்லையா?' என்று கேட்டாள் அவன்.

"பொதுவாகவே ஆடவர்களாகிய நீங்கள் ஒரவஞ்ச னைக்காரர்கள். சீதை இராமன் இருவர் கண்களுமே. ஒன்றை யொன்று உண்டன என்பதுதான் உண்மை.

எண்ணரு நலத்தினாள் இனையன் நின்றுழி கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று உண்ண்வும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.

இதுதான் பாட்டு. நீங்கள் சீதை கண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது எனக்குப் பிடிக்கவில்லை" என்று கூறிக் கண்கள் சிவந்தாள் அக்காரிகை.

"நீ கூறிய கம்பராமயணப் பாடல் மிகவும் சுவையாக இருக்கிறது. ஆனால் கண்களைப் பற்றி அதில் கூறிய கருத்துகள் இயல்புக்கு மாறாக உள்ளன" என்று கூறினான் அவன்.

"அப்படியா?" என்று கூறிப் புருவவில்களை வளைத் தான்.