இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஊக்கச் சக்தியின் "மெகா வாட்’ அளவு பாவேந்தரால் இங்கு பேசப்படுகிறது.
காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்: கானமுண்டாம்: சிற்பமுதல் கலைகள் உண்டாம்-என்று பாரதியார் பாடுகிறார்.
‘உலகில் நடைபெறும் அடிப்படைக்
காரணமாகவும்"
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஊக்கச் சக்தியாகவும்
விளங்குவது காதலுணர்வே' என்ற சிக்மண்ட் ஃப்ராயடின் கொள்கையோடு மேலே கூறப்பட்ட பாரதி பாடல் ஒத்துப்
போகிறது.
காதல் என்பதுஉடலுறவை மட்டுமே
நோக்கமாகக் கொண்டதன்று.
அதற்கு
விரிவான பரிமாணங்கள் உண்டு
ஒருவர் கண்ணில் ஒருவர் கண்ணையிட்டு,
உள்ளமும் உடம்பும் சூடேறப்
பார்த்துக் கொண்டிருப்பதன்று காதல்.