பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

குவளைத் தண்ணீரை எடுத்து அதன் தலையில் கொட்டுவைப்பதுபோல் லொட்டென்று வைத்துப்

பரிமாறத் தொடங்கினாள்.

அன்றுஅவனுக்குப் பிடித்த மோரிக்குழம்பு. வெட்டி எடுத்த

நீர்ப்பூசணித் துண்டங்கள் பணிக்கட்டிப் பாலங்களாகக் குழம்பில் படுத்திருந்தன. எண்ணைய்த் தாளிப்புக்கு நடுவே பவழத் துண்டுபோல் மிளகாய் வற்றல் மிதந்து கொண்டிருந்தது. அவரைக்காய் மரகதப் பொரியலும், கலப்பு மணங் கய ழக் கருத்தோடு சமைத்த அவியலும் இலையை அணி செய்தன. இவ்வளவு சுவையான உணவைத் தாழியில் தலையைவிட்ட மாடுபோல் குனிந்தவண்ணம் மென்றுகொண்டிருந்தான் அவன். கணவன் இப்படிப் பனிக் கட்டியாக உறைந்திருக்கும் நேரத்தில் எதையாவது சோல்லி அவன் உள்ளத்தில் சூடுண்டாக்கி அவனைப் பழைய நிலைக்குத் திருப்புவது அவள் வழக்கம்.

سے نerag GBa

"ஏனுங்க..." என்று