பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱9

மெதுவாகக் குரல் கொடுத்தாள் அவள். :ஊம்..." என்று

முணகினான் அவன். மோர்க்குழம்பு எப்படி:

என்றாள் அவள். "நல்லாருக்கு...' என்றான் அவன். ‘என்ன நல்லாருக்கு...? அவ்வளவு தானா? நான் எவ்வளவு தொல்லையெடுத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்தமான மோர்க்குழம்பைச் சமைத்திருக்கிறேன்! அதைப்பற்றிப் பாராட்டி ஒரு சொல்கூட நீங்கள் கூறவில்லையே?’ என்றாள் அவள். எங்கே உன் கையைக் காட்டு, பார்க்கலாம்!" என்று குறுப்பாகக் கேட்டான் அவன். அவள் கையை நீட்டினாள். ‘எங்கே உன் விரல்கள் சிவக்கக் காணோமே?’ என்றான் அவன். அவள் விழித்தாள். கமுகம் வியர்த்திருக்கிறது! சமையல் செய்யும் போது கையைக் கழுவாமல் சேலையில் துடைத்தக் கொண்டது கறையாகத் தெரிகிறது!-ஆனால் விரல்கள் மட்டும் சிவக்கவில்லை!" என்று கூறிச் சிரித்தான் அவன். விரல்கள் ஏன் சிவக்கவேண்டும்?" என்று வியப்போடு கேட்டாள் அவள்.