பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 1

மனைவியின் விரலை இலக்கியத் தலைவியின் விர லோடு ஒப்பிட்டுக் கிண்டல் செய்யத் தெரிந்த உங்களுக்கு, அப்பாடலில் உள்ள தலைவனின் அரும் பண்பு புலப் படவில்லையே!' என்றாள் அவள்,
  • அது என்ன? எனக்குப் புலப்படாத அரும் பண்பைத் தலைவனிடமிருந்து நீ கண்டுபிடித்துவிட்டாய்?'-என்று கேட்டான் அவன்.

இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே! என்ற வரிகளைக் கூர்ந்து கவனித்தீர்களா?

அந்தத் தலைவன் மோர்க்குழம்பைச் சுவைத்துச் சாப்பிடும்போது இனிது! இனிது!’ என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான் தலைவி அதைக் கேட்டு முகமலர்ச்சியோடு எதிரே இருந்து பரிமாறுகிறாள். நீங்கள் நான் வைத்த மோர்க்குழம்பைப் பற்றிப் பாராட் டாக ஒரு சொல் சொன்னீர்களா?' என்று கேட்டாள். அவள் கண்களில் நீர் கோத்துக்கொண்டது.

"ஒ... அதைச் சொல்லுகிறாயா? பாராட்டத்தான் வேண்டும் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வா! பெண்களை எப் போதும் படுக்கை அறையில்தான் பாராட்ட வேண்டும்: என்று குறுஞ் சிரிப்போடு கூறினான் அவன். அவன்பேச்சில் இருத்த அவசரம் அவளுக்கு புரிந்தது.

அவன் தலையணை மீது தலைசாய்த்து நிமிர்ந்து படுத் திருந்தான். அவன் மாரிடையே தலையணையாக்கி அவள் படுத்திருந்தாள்.

சற்று நேரத்துக்கு முன்னிருந்த இறுக்கம் இளை இருந்தது.