பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

பனிக்கட்டியாக உறைந்து போயிருந்த அவனுடைய உள்ளம், அவள் வெப்பப் பெருமூச்சால் உருகி இன்ப அருவி யாகப் பெருக்கெடுத்தது.

அவன் பேசினான்:

" என்ன...'

  • ஊம்.சொல்லுங்க!

ஒரு பெண்ணின் முதல் தகுதி என்ன தெரியுமா?"

சொன்னால்தானே தெரியும்."

'நன்கு சமைக்கத் தெரிய வேண்டும்!"

  • அப்ப...பெண்ணுங்குற சொல்லை மாற்றி மனை வின்னு சொல்லுங்க. ஏன்னா...சமைக்கவே தெரியாத

பெண்கள் உலகத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க. அப்ப...அவங்கெல்லாம் பெண்ணே அல்லன்னு ஆயிடும்!”

ஆண்கள் எப்பவுமே சாப்பாட்டுராமர்கள்.

சுவையாகச் சமைக்கத் தெரிந்த மனைவி எளிதாகக் கணவனைக் கைக்குள் போட்டுக் கொள்வாள்.

& ஓர் ஆங்கில அறிஞன் சொல்லுகிறான்...

என்ன ஆண்கள் எல்லாம் சாப்பாட்டுராமர்கள் என்றா...?"

  • இல்லையில்லை! சுவையாகச் சமைக்கத் தெரிந்த பெண் கணவன் உள்ளத்தில் நேரடியாக இடம் பிடித்து விடுகிறாள் என்று.”

"அப்படியென்றால்...கணவன் உள்ளத்தில் இடம்

பிடிக்கக் குறுக்கு வழிவேறு இருக்கும்போல இருக்கு...' என்று கூறிச் சிரித்தாள் அவள்.