பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

குறுக்கு வழியும் இருக்கு...அது என்னவென்று உனக்கே தெரியும்!" என்றான் அவன். அவன் பேச்சில்

குறும்புத்தனம் இருந்தது.

சரி சொல்லுங்கள்! என்றாள் அவள்.

வள்ளுவர் கூடச் சாப்பாட்டுராமரிதான்!-என்றான் அவன்.

இக்கூற்றைக் கேட்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

படுத்திருந்த அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

"என்னங்க...வள்ளுவர்மீது இவ்வளவு பெரிய அபாண் டத்தைத் தூக்கிப் போடlங்க? என்றாள் அவள்."

பின் என்ன?”...மனைவி இறந்தபோது வள்ளுவர் வருந்திப் பாடியதாக ஒரு பாடல் தனிப்பாடல் திரட்டில் காணப்படுகிறது. .

அடிசிற்கு இனியாளே அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய் - அடிவருடிப் பின்துங்கி முன்னெழுந்த பேதையே போதியோ என்துரங்கும் என்கண் இரா.

- என்பது அப்பாடல். வள்ளுவருடைய மனைவியிடத்தில் பொருந்தியிருந்த எத்தனையோ உயர்ந்த பண்புகள் இப் பாட்டில் குறிப்பிடப்படுகின்றன.

அவள் அன்புடையவள் !

கணவன் சொல் தவறாத பணிவுடையவள் ! upe to.-5