பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இல்லப் பணிகளை இரவில் முடித்து - கணவனைத் தன் பணிவிடையால் உறங்க வைத்துவிட்டு அதற்குப்பின் உறங்கும் உயர்ந்த பண்பினள்.

என்றாலும்

விடியலில் கணவன் எழுவதற்கு முன் எழும் பழக்க முடைய இல்லத்தரசி!

இத்தனை அரும்பண்புகள் அவளிடத்தில் பொருந்தி யிருந்தாலும், அவற்றையெல்லாம் முதலில் குறிப்பிடாமல் பாடலில் எடுத்தவுடன்,

  • அடிசிற்கு இனியாளே!' என்றுதானே குறிப்பிட்டு வருந்துகிறார் வள்ளுவர்.

மனைவியின் இறப்பால் அவருக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு, இனிச்சுவையாகச் சமைத்துப்போட ஆளில்லை

என்பதுதானே. அதனால்தான் வள்ளுவரையும் சாப் பாட்டு ராமர்” என்றேன் நான்-என்று கூறினான் அவன்.

  • இப்பாடலைப் பாடியவர் வள்ளுவர் இல்லை. திருவள்ளுவ நாயனார் என்ற சாப்பாட்டு ராமர்' என்று கூறிச் சரித்தாள் அவள்,

"என் நண்பன் ஒருவன் எம். எஸ். சி., பட்டம் பெற்ற ஒரு பெண்ணை மணந்து கொண்டான்.”

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு: அரைகுறையாகச் சமைக்கத் தெரியும்.

திருமணம் ஆனதும் புதுக் குடித்தனம் வைத்தனர் பெற்றோர்கள், .