臂5
முதல் நாள் அவள் தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள், ! உங்களுக்கு என்ன பிடிக்கும்?' என்று.
எனக்குக் குவாலி பிளவர் கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவன் சொன்னான்.
பெரிய, ஊட்டி குவாலி பிளவர் ஒன்று வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று விட்டான். அவள் அதை மிகவும் பொறுப்போடு சமைத்து வைத்தாள்,
இடைவேளையில் அவன் சாப்பாட்டுக்கு வந்தபோது அன்போடு அவள் உணவு பரிமாறினாள். தன் புது மனைவி பரிமாறிய குவாலி பிளவர் கறியின் ஒரு துண்டை எடுத்து ஆர்வத்தோடு வாயில் போட்டான். ஒரே நாற்றம் ஆவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. தா...என்று துப்பி விட்டான். எப்படியிருக்கும் அவளுக்கு? அவள் முகம் விழுந்துவிட்டது.
- என்ன குவாலி பிளவர் இப்படிக் கெட்டவாடை வீசு கிறது? என்ன செய்தாய்?’ என்று அருவருப்போடு கேட்டான் என் நண்பன்.
என்னங்க...எவ்வளவு பொறுப்போடு உங்களுக்காக இதைச் சமைத்தேன் தெரியுமா? குவாலி பிளவரை அரிந்த போது அதில் பெரிய பெரிய புழுக்கள் இருந்தன. நான் அரிந்த பூவைக் கிருமிக் கொல்லியாகிய டெட்டாவில்" போட்டு நன்றாக கழுவிவிட்டும் பக்குவமாகச் சமைத் தேன் என்றாள் அப்பேதை!” என் நண்பனுக்கு அழுவதர, சிரிப்பதா என்று புரியவில்லை: -என்று கூறி நிறுத்தினான் அவன்.
"என்ன இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குறும்பு ஆகாது. படித்த பெண்கள் எல்லோருக்குமே நன்றாகச்