இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9. அமிழ்தினும் இனியது
இரட்டைக்கட்டில்! நடுவில் நெகிழ (Rubber) விரிப்பு அதில் ஒரு விடி வெள்ளி, மேலே மினுக்கும் விளக்கை வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அந்நிலாப் பிஞ்சு
கால்களை உதைத்துக் கைகளை அசைத்து விளையாடியது. அப்படுக்கை வானவில் பாலொழுகும் வாயைத் திறந்து யாழ் போல் ஓசை நயத்தோடு அழுதது. அதன் இரண்டு பக்கமும்
நான்கு விழிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அவன்
அந்த அமிழ்துச் சிலையை ஆர்வத்தோடு கையில் எடுத்தான். 'மெள்ள......மெதுவாகத் தூக்குங்கள்! குழந்தையை இப்படியா துக்குவது!" என்று அவள் அவனைக் கடிந்து கொண்டாள். "பின் எப்படித் தூக்குவது?’’ என்று கேட்டான் அவன்! 'குழந்தையின் தலை தாமரைப்பூ!