பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፶ 9

உடல் தண்டு!

தண்டு தாமரைப்பூவின்

கனத்தைத் தாங்குமா? துவண்டு வளைந்து விடாதா?’’

என்றாள் அவள்,

"அழகான உவமை" என்று அன்போடு சொன்னான் அவன், *இதை நான் சொல்ல வில்லை. பாவேந்தரின் குடும்பவிளக்கின் தலைவி தன் கணவனிடம் சொல்லுகிறாள்" என்றாள் அவள்.

  • அப்படியா?" ஆமாம்! குழந்தை ஒரு பச்சை மண் கலம்! அதைப் பக்குவமாக எடுக்க வேண்டும்’ என்றாள் அவள் "குழந்தையை எப்படி தூக்குவது? என்றெல்லாம் பாவேந்தர் பாடியிருக்கிறாரா என்று வியப்போடு கேட்டான் அவன், அவள் பாட்டைப் பாடினாள்: குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை! அம்மலர் தண்டே அழகிய மெல்லுடல்: தண்டு மலர்த்தலை தாங்குமா அத்தான்? தலை உடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி உலை அமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல்போல் தவறாது தூக்குவது தலையா கிய கடன். தெரிந்ததா அத்தான் என்றாள் தெரிவை: அவள் சொன்னபடி குழந்தையை எடுத்துக் கன்னத்தில் 1 சாய்த்துக் கொண்டான் அவன். * அத்தான்! குழந்தை உங்களைப் போலவே இருக்கிறான்!” என்று பூரிப்போடு சொன்னாள் அவள்