பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 0

  • இளங்காலை, பகற்பொழுதை எப்படிக் காட்டுகிறதோ, அதைப் போல் குழந்தைப் பருவம் மாந்தனைக் காட்டுகிறது’

என்றான் மில்டன். என் இளங் காலைப் பொழுதான இக்குழந்தை என்னைக் காட்டாமல் வேறு யாரைக் காட்டும்? என்று கூறிச் சிரித்தான் அவன். "மக்கள் மெய்திண்டல் உடற்கின்பம்." என்று வள்ளுவர் உணர்ந்து பாடியிருக்கிறார். என்றான் அவன். ஏன்? மனைவி மெய் தீண்டல் உடற்கின்பம் இல்லையா?" என்று குறும்பாகக் கேட்டான் அவள். ‘இன்பந்தான்! நீ சுடுநீர்; குழந்தை பனிநீர்! இரண்டும் அந்தந்த நேரத்துக்கு இதமான இன்பம்தானே!-என்றான் அவன். ..உங்களால் குறும்பில்லாமல் பேசத் தெரியாதே!-என்று கூறிக் குறுஞ்சிரிப்பை உதிர்த்தாள் அக் கோலமயில். 'நேற்று இரவு உன்னை நான் எழுப்பியது உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டான் அவன். "ஏன்? என்று கேட்டாள் அவள். *உணர்வுகள் என்னை எழுப்பியதால் தான் உன்னை எழுப்பினேன். ஆனால் நீயோ... உன் புதிய காதலனை அனைத்தவண்ணம் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருநதாய்' என்றான்

அவன் The childhood shows the man as monning shows the dny . . —Milton