பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

அவள் கொஞ்சம் புரண்டாலும் குழந்தை அவளடியில் சிக்கிக் கொள்ளுமே என்று அவன் அஞ்சினான்.

அவளைத் துயிலுணர்த்திச் சரியாகப் படுக்கச் சொல்ல வேண்டும் என்று எண்ணினான் கணவன்.

அவள் களைந்து எறிந்திருந்த பூச்சரம் கட்டிலில் கிடந்தது.

அதை எடுத்து அவள் முகத்தில் போட்டான், அவளை துயிலுணர்த்துவதற்காக.

ஆனால் அவள் விழிக்கவில்லை, நன்றாக உறங் இனாள்.

பின்னர்அதே மலர்ச் சரத்தை எடுத்துக் குழந்தையின் மீது போட்டான்.

உடனே அவள் கை குழந்தையின் மீது விழுந்த மலர்ச் சரத்தைத் தட்டி விட்டு விட்டுப் பழையபடி அனைத்துக் கொண்டது.

தூக்கத்தில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சியைப் பார்த்து வியந்து போனான் கணவன்.

"தலைமட்டும் இரண்டென் றாலும்

குழந்தையும் தாயும் ஒன்றைக் குலையேயாம் உயிரும் ஒன்றே! உள்ளத்தின் கூறும் ஒன்றே!' என்று கூறி மகிழ்கிறான் கணவன்' - என்று அவள் சொன்னாள்.

"சரி? குழந்தை தூங்கிவிட்டது என்று கூறிப் படுக்கை யில் மெதுவாக அந்த மலர் மாலையைக் கிடத்தினான் அவன்;

பின்னர் அவன் கழுத்தில் அவள் மாலையானாள்.