பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 5

போவிச் சிரிப்புக்காரி கடையில், கண்ணாடிப் பெட்டிக்குள் வண்ணத் தாளில் சுற்றிவைக்கப்பட்ட பழத்தைப் போன்றவள். ஒரு பெண் இயல்பாக நாணிச் சிரிக்கும் அழகுக்கு ஒப்பாக வேறு எதையும் சொல்ல முடியாது !' என்றான் அவன். * எப்போதுமே உங்களுக்குச் சம்பாதிக்கும் பெண்ணைக் கண்டால் பிடிப்பதில்லை! அதனால் தான். என்னைக்கட நீங்கள் வேலையில் சேர வேண்டாம் என்று தடுத்து விட்டீர்கள் இல்லையா?" என்றாள் அவன். :இங்குதான் நீ தவறு செய்கிறாய் ! நீ விரும்பினால் இன்றைக்கும் வேலைக்குச் செல்லலாம் : அதை நான் தடை செய்யவில்லை. ஆனால்... நீ வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அளவுக்கு நம் குடும்பத்தில் பொருள் தட்டு இல்லாதபோது நீ வேலைக்கு ஏன் செல்ல வேண்டும்? இந்த நாட்டில்வசதியிருக்கும் ஒரு குடும்பத்துப்பெண் வேலைக்குப்

போனால் வசதியற்ற ஓர் ஏழைக் குடும்பத்தைப் பட்டினி போடுகிறாள் என்பது பொருள் !

அலுவல் ஒரு பெண்ணுக்கு