பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

ஏன் செய்யாமல் ? ஆடவனும் சரிபங்கு தவறு செய்கிறான். ஆடவன் கணவன் ' என்ற ஆட்சிப் பீடத்தில் ஏறி, அமர்ந்துவிட்ட மமதையில் தவறு செய்கிறான். பெண் தன்னுடைய சொந்தக்காலில் நிற்க முடியும் என்ற மமதையில் தவறு செய்கிறாள். 'எனவே இரண்டு பேரும் குற்றவாளிகளே!’ என்றான் அவன்.

சரி” இதற்குத் தீர்வுதான் என்ன? என்று கேட்டாள் அவள். * நீ எகிப்தியச் சிந்தனையாளன் ஈசோப்' எழுதிய நீதிக் கதைகளைப் படித்திருப்பாய் என்று எண்ணுகிறேன். அவற்றுள் "ஆட்டுக்குட்டியும் ஓநாயும்" என்ற கதை நீ படித்தது தானே? ஓர் ஓடைக் கரையில் ஒர் ஒதாயும் ஆட்டுக் குட்டியும் தண்ணிர் குடித்துக்

கொண்டிருந்தன ஒநாய் ஒடையின் மேற்பகுதியிலும், ஆட்டுக்குட்டி கீழ்ப்பகுதியிலும் தண்ணீர் குடித்தன. ஒநாய் சினத்தோடு கேட்டது: "ஏன் நான் குடிக்கும் தண்ணீரைக் கலக்குகிறாய்?"

略·

என்று ஆட்டுக்குட்டி அடக்கமாகக் கேட்டது: ஐயா ஒநாயாரே ! நீர் குடித்த தண்ணீர்தான்