உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3

மூன்று பவுன் கனமான பொன்னாலான அரைஞாண். இறுக்கிக் கொண்டிருந்தது. அதன் உறுத்தல் தாங்காமல் குழந்தை இவ்வளவு நேரம்

அழுது கொண்டிருந்தது. மாமியாரின் அனுபவ அறிவு கண்டு பிடித்து விட்டது. அரைஞானை அவிழ்த்துத்

தளர்த்திக் கட்டினார்: குழந்தையை மடியில் போட்டுத்

தட்டிக் கொடுத்துத் தாலாட்டுப் பாடினார். குழந்தைன் கீரைவிதைக் கண்ணில்

ஒரு கிளுகிளுப்பு !

பாட்டி, வயிற்றில் கைவைத்துக் கிசுகிசு மூட்டும் போது கலீர் கவீர்” என்று சிரித்தது. பின்னர்

கண்மூடி அமைதியாக உறங்கியது. அவள் வியந்தாள்:

மாமியாரின் கை மந்திரக் கை!

அடுத்தநாள்

மாமனாரும் மாமியாரும்

ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்: மருமகள் எவ்வளவு தடுத்தும்

அவர்கள் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ' குழந்தையையும் உங்களையும்