பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

ஏன்?" என்று

கேட்டாள் அவள். * அந்த வானம்பாடிகளுக்கு அவர்கள் கூடுதான் சொர்க்கம்!

தாமரைக் கண்ணான் உலகம்! எல்லாம்! என் தந்தை படிப்பார், எழுதுவார். மற்ற தேரங்களில் - சமையலறையில் உள்ள என் தாயாரை சுற்றிச் சுற்றி வருவார்! சுவையாகக் கிண்டல் செய்வார்:

சிறு சண்டை போடுவார்; அவருக்குப் பொழுதுபோக்கும் கேளிக்கையும் இதுதான்:- என்றான் அவன் "இந்த வயதிலுமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். "காதலுக்கு வயது கிடையாது: இளமைக் காதல்கரையுடைத்துப் பாயும் புது வெள்ளம்: அதில் தெளிவிருக்காது. முதுமைக்காதல் - தெளிந்து சலசலத்து ஓடும் நீரோடை! அந் நீரோடையின் இதயத்தில் கூழாங்கல்லும் மின்னும் கிளிஞ்சலும், வண்ண வேறுபாட்டோடு படிந்துகிடக்கும் பொடிமணலும்கூடக் கண்ணுக்குப் புலப்படும்.