பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

கசப்பாக்கி விடுகிறது. பிள்ளைகளை நம்பித்தான் வாழவேண்டும் என்ற நிலைமையில் உள்ள முதியவர்கள் சிலர் துன்பம் அடைகிறார்கள். அந்நிலை பிள்ளைகளின் பண்பாட்டைப் பொறுத்தது'

என்றான் அவன். *நீங்கள் என்னதான் சொன்னாலும் இளமையோடு 5.4u இனக்கவர்ச்சித்தான் குடும்ப வாழ்க்கையின் அடிப்படைப் பிணைப்பு என்று நான் கருதுகிறேன்.

இளமை நீங்கியதும் இனக்கவர்ச்சியும் குறைந்து விடுகிறது. சுவையற்றதாகிக் குடும்பவாழ்வும் கசந்துவிடுகிறது!’

என்றாள் அவள்.

  • முதுமையில் இனக்கவர்ச்சி குறைந்துவிடுவதாகக் கருதுவது தவறு. கணவன் மனைவியரிடை உள்ள

காதலுணர்வும் முதுமையில் குறைவதில்லை ! அந்தக் காதலை நுகரும் முறைதான் மாறுபடுகிறது. முதுமையிலும் காதலுணர்வு குறையாமல் வாழும் குடும்ப வாழ்க்கைதான் வெற்றி வாழ்க்கை ! இதை அந்தக் காலத்திலேயே -

ஒளவையார் நுட்பமாக ஒரு பாட லில்