பக்கம்:மலர் மணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 99.

டிருக்கிறீர்கள்-உடம்புக்கு ஒன்றுமில்லையே’ என்று கேட் டேன். -

‘உடம்புக்கு ஒன்றுமில்லையம்மா உள்ளம்தான் சரியாயில்லை.”

நடந்ததைப் பற்றிக் கவலைப்படாதிர்கள் அப்பா. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இயற்கை என்பது உங்களுக்குத் தெரியாததா ?”

இப்போது தெரிந்து விட்டது அல்லி.”

நாமும் எவ்வளவோ முயற்சி செய்தோம். இன்னும் ஒரு வாக்கு கிடைத்திருந்தால் கூட நமக்குப் போதும்வெற்றி பெற்றிருப்போம். என்ன செய்வது ! நடந்தது நடந்தாய் விட்டது.”

அல்லி! நீ பெண்குழந்தையா யிருந்தும், இந்தத் தேர்தலில் எனக்காக எவ்வளவோ பாடுபட்டாய். பெண்களிடமெல்லாம் போய்க் கேட்டுக் கொண்டாய். உன் முயற்சியால்தான் பாதி வாக்குக்களாயினும் கிடைத்தன. உனக்கு நான் என்ன செய்தாலும் தகும்எவ்வளவு செய்தாலும் தகும் அல்லி !” -

மகள் தந்தைக்குச் செய்யவேண்டிய கடமையைத் தான் செய்தேனப்பா.”

உன்னைச் சிறக்கக் கட்டிக்கொடுத்து, உன் மனம் போல மகிழ்ச்சியாக வாழவைக்கப் போகிறேன்-நீ கேட்டதெல்லாம் செய்யப்போகிறேன். அல்லி!”

நீங்கள் இருக்கும்போது எனக்கு என்னப்பா குறைவு ? ஆளுல் நீங்கள் இப்போது கவலையை விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/101&oldid=655942" இலிருந்து மீள்விக்கப்பட்டது