பக்கம்:மலர் மணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மலர்

விரும்பவில்லை. இளமையிலிருந்தே போலீசுகாரர். என்றால் நான் அஞ்சுவது உங்களுக்குத் தெரியாதா?”

“அதை அன்றைக்கே சொல்லியிருக்க வேண்டும். எல்லா ஏற்பாடும் ஆன பிறகு இன்றைக்குச் சொல்லி என்ன பயன் ?” -

“எனக்கு அந்த மாப்பிள்ளை வேண் டவே வேண்டாம்பா-அதைவிட என்ன ஒரு பாழுங்கிணற்றில் பிடித்துத் தள்ளி விடுங்கள்”.

“பாழுங் கிணற்றில் பிடித்துத் தள்ளுவதற்காகவா உன்னைப் பெற்று வளர்த்துப் பெண்ணுக்கி விட்டேன் ? சரி, போலிசு வேலை பார்ப்பவர் வேண்டாம் என்றல், வேறு எந்த வேலை பார்ப்பவர் வேண்டுமாம் ? அதையும் இப்போதே சொல்லிவிடு. ஏனென்றால், அப்புறம் டாக்டரும் வேண்டாம்-வழக்கறிஞரும்-இஞ்சினியரும் வேண்ட்ாம் - அவன் வேண்டாம் - இவன் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே யிருப்பாய். அதல்ை, வேறு எவன் வேண்டும் என்று இப்பொழுதே சொல்லி விடம்மா தாயே”. . . --

நம் அத்தை மகன் அழகனத்தான் நான் கட்டிக் கொள்வேன்’. - - -

என்ன ! அழகனயா? வெந்த புண்ணில் வேல் கொண்டா எறிகிறாய் பைத்தியக்காரப் பெண்ணே ! இராத்திரி முழுவதும் இராமாயணம் கேட்டானும்விடிந்ததும் பெருமாள் கோயிலே இடித்தானும். இந்நேரம் நான் வயிறெரிந்து கொண்டு. பேசிய தென்ன-நீ மீண்டும் அந்தப் பகையாளி உறவை விரும்புகிருயே!”

கட்டிக்கொண்டால், அத்தான் அழகனத்தான் கட்டிக்கொள்வேன்; இல்லா விட்டால் எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/104&oldid=655945" இலிருந்து மீள்விக்கப்பட்டது