பக்கம்:மலர் மணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 103

திருமணமே வேண்டாம் ; கன்னியாகவே காலங்கழித்து விடுகிறேன்”.

“ ச்சீ அசட்டுப் பெண்ணே இந்தப் பூச்சாண்டி யெல்லாம் இந்த மாயாண்டியிடம் பலிக்காது. நான் முடிவுகட்டியது முடிவுகட்டியதுதான். என் போக்கை யாராலும் மாற்ற முடியாது என்பது இதுவரை உனக்குத் தெரியாதா? நாளே மறுநாள் நடக்க வேண்டிய பரியம் நடக்கவேண்டியது தான்-நடந்தே தீரும்.”

என்று கன்னத்தில் அறைவதுபோல் ஏசிப் பேசி விட்டு அப்பா எழுந்து சென்று விட்டார். தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சென்று, அடுப்பங்கரையில் இருந்த அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். ‘இந்த நேரத்தில் அப்பாவிடம் நீ சொல்லலாமா? ஏன் எனக்குத் தெரியாமல் வாயைக் கொடுத்தாய் ?” என்று அம்மா என்னைக் கடிந்து கொண்டார்கள். அன்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. தங்களை எண்ணி எண்ணி ஏங்கி அழுதுகொண்டே படுக்கையில் கிடந்தேன்.

பொழுது விடிந்தது. இன்று காலேயிலிருந்தே, நாளைய பரியத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளே அப்பா கவனித்துக்கொண் டிருந்தார். நடைப்பிணமாக நான் வீட்டில் உலவிக்கொண்டிருந்தேன்.

முற்பகல் பத்துமணி இருக்கலாம். யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் ஏதோ பேசியிருந்து விட்டுச் சென்றார். அதிலிருந்து அப்பாவின் தோற்றத் திலும் பேச்சிலும் செயலிலும் பெருத்த மாறுதல் காணப் பட்டது. எங்களுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. அப்பா குனக் கான் எல்லோருக்கும் தெரியுமே ! யாரும் எதுவும்

3.22

f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/105&oldid=655946" இலிருந்து மீள்விக்கப்பட்டது