பக்கம்:மலர் மணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f04 மலர்

கேட்க வில்லை. என்ன நடக்க விருக்கிறதோ என்று அம்மாவும் நானும் விழித்துக்கொண்டிருந்தோம்.

என்னல் இதற்குமேல் எழுத முடியவில்லை அத்தான்! என்னவென்று இதை எழுதுவது எழுதினுல் நம்புவீர் களா அத்தான் இதோ எழுதிவிடுகிறேன். புயல் வீசிய இடத்தில் அமைதி-துன்பம் குடி கொண்டிருந்த இடத்தில் இன்பம்-சாக இருந்த சமயத்தில் வாழ்வு. ஆமாம் அத்தான் ! ஒரு மணி நேரத்துக்குமுன் அப்பா என்ன அன்போடு அழைத்தார். ‘ அல்லி! உன் மனம் போலவே எல்லாம் நடக்கின்றன. அந்தப் போலீசு மாப் பிள்ளையின் தொடர்பு கத்தரித்துக் கொண்டது. இனி உனக்கு அவன் இல்லை. ஆலுைம், நாளேய பரியத்துக் காக எல்லாம் தயாராக இருப்பதால், அந்த நல்ல வேளையில், வேறு மாப்பிள்ளைக்கு உன்னே உறுதிப்பாடு செய்துகொடுக்க விரும்புகிறேன். அந்த மாப்பிள்ளை உன் அத்தான் அழகன்தான். ஆனால், முதலில் அவனே நானே நேரில்கண்டு அவனது விருப்பத்தைத் தெரிந்து கொண்ட பின்புதான், அவனுடைய பெற்றேர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டும். ஆகவே, அவன் இப் பொழுது இங்கே வந்தாகவேண்டும். நான் சொல்லி யனுப்பினுல் அவன் கம்பமாட்டான்-வரமாட்டான். எனவே, நான் வரச்சொன்னதாகக் கடிதம் எழுதியனுப்பு. இருட்டின பிறகு, தன் தாய் தந்தையருக்குத் தெரியாமல் புறப்பட்டு வரச்சொல்லி எழுதியனுப்பு. உடனே செய்.”

என்று அப்பா என்னிடம் கனிவோடு-குழைவோடு, அன்போடு-பரிவோடு சொன்னர். அதைக் கேட்டதுமே இன்பத்தின் எல்லையை எட்டிவிட்டேன். ஆடினேன், பாடினேன், அகமிக மகிழ்ந்தேன். மாப்பிள்ளையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/106&oldid=655947" இலிருந்து மீள்விக்கப்பட்டது