பக்கம்:மலர் மணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 107

-நான் மிகவும் கவர்ச்சியாக உடுத்து அணி செய்து கொள்கிறேன். அல்லி வீட்டிற்குள் நுழைகிறேன். அத்தையும் மாமாவும் அரச வரவேற்பு தருகிறார்கள். அல்லியும் நானும் மேல் மாடிக்குச் செல்லுகிருேம். அவளே நான் முத்தமிட நெருங்குகிறேன். அவள் அகப்பட மாட்டேன் என்கிருள்-துணைச் சுற்றிச் சுற்றி ஆட்டங் காட்டுகிருள்-துரத்திக் கொண்டே யிருக்கிறேன் நான். சிற்றுண்டி வருகிறது. ஊஞ்சலில் உட்காரவைத்து என் வாயில் ஊட்டுகிருள் அல்லி. கொஞ்சுகிருேம்குலவுகிருேம்-கூடிக் களிக்கிருேம்

இவ்வளவும் இன்னும் நடக்கவில்லை-அத்தனையும் உருவெளித் தோற்றம்-அல்லியின் இல்லத்தை அடை வதற்கு முன்பே, நான் என்னையும் அறியாது காணும் பகற் கனவுகள். பகற்கனவு என்று இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். அது இந்த இனம்தான் போலும் ! என்ன தான் இருந்தாலும் இப்படியா பறப்பது?--கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்று என் மனத்துக்குச் சொல்லி அமைதி பண்ணிவைத்தேன்.

இனி நான் உண்மையாகவே புறப்பட்டாக வேண்டும். அல்லி வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். நான் என்ன உடுத்துக் கொண்டால் -எப்படி அணிசெய்து கொண்டால் அவளுக்குப் பிடிக்கும் ! கால்சட்டையும் மேல்சட்டையும் வெள்ளே யாக இருக்கலாமா ? வேறு நிறமுடையதாக இருக்க லாமா ? கால் உறை மாட்டி பூட்சு போட்டுக் கொள்ளவா ? அல்லது வெறும் பஞ்சாப் சாண்டல்’ போட்டுக்கொண்டால் போதுமா ?

வேண்டாம், வேண்டாம். மாப்பிள்ளேயாகப் போகி றேன். ஆதலால், வேட்டி கட்டிக்கொண்டு போவதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/109&oldid=655950" இலிருந்து மீள்விக்கப்பட்டது