பக்கம்:மலர் மணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 109

குரல் பாட்டியிடமிருந்து வந்தது. வாங்க மாப்பிள்ளை !’ என்று அதட்டுவதுபோல் மாமா அழைத்தார்.

வாங்க மாப்பிள்ளை’ என்று மாமா அழைத்ததும் என் வெட்கத்துக்கு அளவேயில்லை. அவர் இதற்கு முன்பு என்னே வாடா போடா என்றுதான் அழைப்பது வழக்கம். இப்போதோ வாங்க என்று உயர்வுப் பன்மையில் அழைத்திருக்கிறார். என்ன இ ள ைம யிலிருந்தே பெயர் சொல்லியே அழைத்துப் பழக்கப் பட்டவர், இப்போது ‘மாப்பிள்ளை’ என்று முறை கொண்டாடி அழைத்திருக்கிறார். அதைக் கேட்டதும் நான் கூச்சப்படாமல் எப்படியிருக்க முடியும் ? நங்கை யரைப் போல நாணிக் கோணி வளைந்து தயங்கி மயங்கி நின்றேன். ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து, “உட்காரு தம்பி என்று சொல்லி அத்தை உட்கார வைத்தார்கள். . . ”

ஏண்டா அழகா பட்டணத்திலேயா படிக்கிறாய் ? என்று பாட்டி கேட்டாள். நான் பதில் சொல்வதற்கு முன்பு, “ஆமாம், மாப்பிள்ளை பட்டணத்தில்தான் படிக்கிறார் , இப்போது திருமணம் செய்துகொண்டு போவதற்காகக் கல்லூரியை விட்டு வந்திருக்கிறார்’ என்று மாமா சொன்னர். அவர் இவர் ‘ என்று எனக்கு மதிப்பு கொடுத்து மாமா சொல்லச் சொல்ல எனக்கு என்னவோபோல் இருந்தது. மாமா இப்பொழுதே இவ்வளவு மதிப்பு கொடுக்கிருரே-மகளைக் கொடுத்து விட்ட பிறகு இன்னும் எவ்வளவு மதிப்பு கொடுப்பாரோ என்று மலைத்தேன்-மகிழ்ந்தேன்.

ஏன் மாப்பிள்ளை அல்லியைக் கட்டிக்கொள்ள

நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்களாமே, உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/111&oldid=655953" இலிருந்து மீள்விக்கப்பட்டது