பக்கம்:மலர் மணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மலர்

தான ?” என்று மாமா கேட்டார். நான் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே வெட்கத்துடன் தலை குனிந்து ‘கொண்டேன். ‘உங்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கட்டாயம் கொடுத்து விடுகிறேன் மாப்பிள்ளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று மறுபடியும் மாமா சொன்னர்.

அப்போது அத்தை காஃபி எடுத்துக்கொண்டு வல்து, ‘இந்தா தம்பி ! இதைச் சூடாகச் சாப்பிடு’ என்று நீட்டினர்கள். ‘இரு இரு ! நீ கொடுக்காதே ! நான் சூடாகக் கொடுக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே மாமா எழுந்து வந்து, என் இரு கன்னங்களிலும் பளிர் பளிர், பளிர் பளிர் என்று மாறி மாறி அறைந்தார். ‘ அல்லி யாடா வேண்டும் உனக்கு அல்லி, அயோக்கியப் பயலே! காதலாம் காதல் கழுதைப்பையனுக்கு” என்று சொல்லிக்கொண்டே காலால் எட்டி எட்டி உதைத்தார் கழுதை மாமா எனக்கு ஒன்றுமே ஓடவில்லை.

ஐயோ, அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று அத்தை அலறிஞர்கள். வேண்டாமடா வேண்டாமடா என்று பாட்டி பதைபதைத்தாள். இதை எப்படியோ அறிந்து கொண்ட அல்லி, கூட்டை விட்டு விண்ணென்று வெளியே புறப்பட்ட புருவைப்போல எங்கிருந்தோ சுழன்று ஓடிவந்தாள் அப்பா அப்பா ! இதற்குத்தான வஞ்சகமாக வரச்சொன்னீர்கள் ? ஒன்றும் செய்யா தீர்கள் அத்தானே” என்று ஒல மிட்டாள். ஒரே அழுகை.

அழுவதா-அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. செய்வதறியாது திகைத். தேன். கண்கள் கலங்கின-மானக்கேட்டால் முகம் வெளுத்தது - கைகால்கள் நடுங்கின - எ ண் சாண் உடம்பும் ஒருசாண் உடம்பாகக் குன்றிப்போய் விட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/112&oldid=655954" இலிருந்து மீள்விக்கப்பட்டது