பக்கம்:மலர் மணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 113’

-காலால் உதை உதை என்று உதைத்தேன். இருங் தாலும் என்னுல் முடியுமா ? நாடகமா இது, ஒருவன் நூறுபேரைக் கொல்ல நாடகத்தில், கதைத் தலைவன் வலக்கையை நீட்டினுலே அந்தப் பக்கம் ஐம்பது பேர் விழுந்து செத்துப்போவார்கள்-இடக்கையை நீட்டில்ை இந்தப் பக்கம் ஐம்பது பேர் விழுந்து இறந்து போவார்கள். அது நாடக தருமம். ஆனல் நானே நன்றாக அகப்பட்டுக் கொண்டேன். என்னைப் பிடித்துக் கூடத்துத் தூணில் இறுகக் கட்டி விட்டார்கள்.

நீங்கள் அடித்தாலும் அடியுங்கள், அவர்களே விட்டு அடிக்கவைக்காதீர்கள் அப்பா ! நீங்களும் அடிக்கா தீர்கள் ‘ என்று அல்லி தன் தந்தையின் காலில் விழுந்து கெஞ்சிள்ை. அத்தையும் பாட்டியும் அவரை வைது கொண்டே யிருந்தார்கள். -

அந்த நான்கு கைக் கூலிகளையும் மாமா மறுபடியும் பழைய இடத்திற்கு அனுப்பி, பாரா. உஷார் பார்த்துக் கொள்ளச் செய்தார். பிறகு மாப்பிள்ளைக்கு மரியாதை செய்யத் தொடங்கினர். என்னையாடா செருப்பால் அடிக்கப் பார்த்தாய் ! என் மகளா உனக்கு வேண்டும், மானங்கெட்ட பயலே என்று சொல்லி, என் முகத்தில் காறிக் காறித் துப்பிக் கும்பாபிடேகமே செய்து விட்டார். கீழே விழுந்து கிடந்த செருப்பை எடுத்து, என் தலே மேலே அடி அடி என்று அடித்தார். காளத்தியப்ப னுக்குக் கண்ணப்பர் இப்படித்தான் செய்தாராம். செருப்புக் கால்களால் உதைத் தாராம்-வாயிலிருந்து நீரை உமிழ்ந்து அப்பனேத் திருமுழுக்கு ஆட்டிரைாம். எனக்கு வாய்த்த கண்ணப்பரோ, இவ்வளவு போதா தென்று, இடுப்பில் கட்டியிருந்த வார்ப்பட்டையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/115&oldid=655957" இலிருந்து மீள்விக்கப்பட்டது