பக்கம்:மலர் மணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மலர்

பெண் அல்லவா அவர்கள் ? தாய் வீட்டிலிருந்து ஒரு நாய்க்குட்டி வந்தாலும், அதைத் தம் பிள்ளையினும் பெரி தாகப் பெண்கள் போற்றுவார்களே ! -

‘ உடம்பு எப்படி கண்ணு இருக்கிறது ? நீ ஏன் இங்கே வந்தாய் ? உனக்கு மாமா குணம் தெரியாதா ? உன் அம்மாவும் அப்பாவும் உன்னத் தவங்கிடந்து பெற்றார்களே! ஒரே ஒர் ஆண்பிள்ளை என்று செல்வ மாக வளர்த்தார்களே.-இங்கே வந்து சீரழிந்து விட்டாயே, செல்வமே 1 ஐயோ, அண்ணனுக்கும் அண்ணிக்கும் நான் என்ன பதில் சொல்வேன்! யாது செய்வேன் அவர்கள் கேள்விப்பட்டால் துடித்துச் செத்துவிடுவார்களே !’ என்று அத்தை அழுது புலம்பினர்கள்.

அல்லியோ, தன் கணவன் கோவலனுக்காகப் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வழக்கிட்டு வாதாடிய கண்ணகியைப் போல, ஏதேதோ சொல்லிம்புகளால் தன் தந்தையைத் தாக்கிக்கொண்டிருந்தாள். இடித்த புளிபோல் இருந்தார் அவர். பனங்காட்டு நரி சல சலப்புக்கு அஞ்சாதல்லவா ?

நான் மெள்ள எழுந்து கின்றேன். அத்தையும் அல்லியும் இருபக்கமும் தாங்கிக்கொண்டே கூட எழுந்து நின்றார்கள். எங்கள் வீட்டை நோக்கிப் புறப் பட்டேன்.

“மாமா அடித்துவிட்டதாக அப்பாவிடமும் அம்மா விடமும் தொல்லாதே அழகா அடிபட்ட காயத்தைப் பார்த்து அவர்கள் கேட்டால், நடுத்தெருவில் நடந்து தொண்டிருந்த பெ. மது ஆரோ அடித்துவிட்டதாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/118&oldid=655960" இலிருந்து மீள்விக்கப்பட்டது