பக்கம்:மலர் மணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 117

சொல்லு என்றைக்கிருந்தாலும் அல்லி உனக்குத் தான். மாமா உன் மாமனுர்தான் ! அதனுல் அவரை இப்போது உன் பெற்றேரிடம் காட்டிக்கொடுக்காதே! பிறகு பெரிய போரே மூண்டுவிடும்-இரண்டு குடும்பங் களுமே தொலைந்துபோகும் ! தயவுசெய்து என் வேண்டுகோளைப் புறக்கணிக்காதே அழகா” என்று உருக்கமாக அத்தை வேண்டிக்கொண்டார்கள். ஆமாம் அத்தான் ‘ என்று அல்லியும் பின்பாட்டு பாடினுள். கடுங்காவல் தண்டனைபெற்ற அந்தச் சிறைக்கூடத்தி லிருந்து ஒருவிதமாக வெளியே வந்தேன்.

நடக்க முடியவில்லைதான். குடிகாரனைப்போலத் தள்ளாடித் தள்ளாடி நடந்து போனேன். எதிரே வருப வர்கள் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாதபடி நடித்துக்கொண்டே கடக்க வேண்டியதாயிற்று. எதிரி யின் வாள் வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் புற முதுகிட்டு ஓடிவரும் வேந்தனைப்போலே, வெட்கம் பிடுங்கித் தின்ன வெலவெலத்து வீட்டிற்குள் புகுந்தேன்.

நல்லவேளை-முன்கட்டில் யாரும் இல்லை. புது நாட் டாண்மைக்காரர் ஆதலால், ஊர்க் காரியங்களைக் கவனிப் பதற்காக அப்பா குமரக்கோட்டம் சென்றிருந்தார். படிப்புக்காகப் பட்டணத்திற்குச் செல்லவிருக்கும் எனக்குக் கொடுத்தனுப்புவதற்காக அம்மாவும் கற்பக மும் அடுப்பங்கரையில் சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டிருந்தார்கள். நான் யாருக்கும் தெரியாமல் படுக்கையறைக்குள் நுழைந்தேன்; இறுகப் போர்த்திக் கொண்டு கட்டிலின்மேல் படுத்துக்கிடந்தேன்.

அறையில் என்னவோ எடுக்கவந்த, படுத்திருக்கிறது ? அண்ணுவா ‘-ஏ/ இத்

ir

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/119&oldid=655961" இலிருந்து மீள்விக்கப்பட்டது