பக்கம்:மலர் மணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 119

‘உடம்புக்கு என்னடா அழகா ? ஏன் இதற்குள் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாய் ? என்று அப்பா கேட்டார். சாப்பாடே வேண்டாம் என்றாயாமே!” என்று அம்ம்ா கரைந்தார்கள். உலாத்தச் சென்றிருந்தபோது, புகைவண்டி நிலையத்திலுள்ள உணவுக்கடையில் நான் நண்பர்களுடன் சிற்றுண்டி அருந்தினேன்; அதனுல் பசி இல்லை. நேற்று தேர்தல் வேலே பார்த்ததாலும், விழாவிற் காக வெகுநேரம் பாடுபட்டதாலும் உடம்பு அலுப்பா யிருக்கிறது; அதல்ை சிக்கிரம் படுத்துக்கொண்டேன். எனக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டுப் படுங்கள்” என்று சமாளித்தேன். நான் மேலே கை வைத்ததும், ஆ-ஊ’ என்று அண்ணன் கத்திற்று. ஏன் என்று கேளுங்கள்” என்று கற்பகம் வத்தி வைத்தாள். ‘ஏன், சுரம் அடிக்கிறதா ? என்று கேட்டுக்கொண்டே, அம்மாவும் என் உடம்பின்மேல் கை வைத்துத் தடவினர்கள். நான் வாய் திறந்து கத்தாமல் உள்ளேயே சாம்பி, அப்படியும் இப்படியும் நெளிந்து கொடுத்தேன். ஏதோ தழும்புபோல் தட்டுப் படுகிறதே! என்ன இது ஏதாவது காயமா ? என்று ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி அம்மா கேட்டார்கள். எங்கேயாவது விழுந்து விட்டாயாட்ா?’ என்று அப்பா அடி எடுத்துக் கொடுத்தார். “ஆமாம் அப்பா-ஆமாம் அப்பா ! நானும் என் நண்பனும் சைக்கிளில் போனுேம் -வழியில் ஓரிடத்தில் வழுக்கி வண்டியோடு விழுந்து விட்டோம். கீழே கற்கள் நீட்டிக் கொண்டிருந்ததால் உடம்பில் சில இடங்களில் கிறிவிட்டன “ என்று சொல்லிப் பெருமூச்சு விட்டேன். ‘பொழுது போன பிறகு புகைவண்டி நிலையத்துக்கு ஏன் போனிர்கள் ? சரி சரி துரங்கு ‘ என்று சொல்லிக்கொண்டே அப்பா

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/121&oldid=655964" இலிருந்து மீள்விக்கப்பட்டது