பக்கம்:மலர் மணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மலர்

அகன்றார் கற்பகம் அப்பொழுது செய்திருந்த தின் பண்டம் ஒன்றைக் கொண்டுவந்து கையில் தந்தாள். வேண்டாம் என்று சொல்லாமல், படுத்தபடியே அதை வாயில் போட்டுக் குதப்பினேன். அடுத்து, அம்மா கொண்டுவந்த பாலையும் குடித்து வைத்தேன். அதன் பிறகுதான் அவர்கள் இருவருக்கும் நிறைவு ஏற்பட்ட்து போலும் முற்றுகை தளர்ந்தது. தனியாக விடப் பட்டேன். -

எனக்கு ஏது தூக்கம்! அப்பா விடும் குறட்டை நன்கு கேட்கிறது. நேரம் ஆக ஆக, எனக்கு உடம்பில் வேதனையும் பெருகிக் கொண்டே யிருந்தது. காதல் தந்த பரிசல்லவா? எவ்வளவோ விழிப்புடன் இருந்தும், ந்ேதத் தெரிந்திருந்தும் எப்படியோ சுழலில் சிக்கிக் கொண்டேனே! அந்தச் சுழலோ, அடித்துக்கொண்டும் போகாமல், கரையும் ஏற்றிவிடாமல் தனக்குள்ளேயே சுற்றவைத்துத் திக்குமுக்காடச் செய்கிறது. பெற்றாேர் அறியாமல் பெண் வீட்டிற்குச் செல்லும் பேதைகளுக்குஇல்லே-பேடிகட்கு என் எடுத்துக்காட்டு ஓர் அறை கூவல் போலும்! நெஞ்சப் பாறையில் எண்ணங்கள் அலைமோதிச் சிதைந்து சிதறிக் கொண்டிருந்தன. இந்த இடத்தில் உள்ளத்துக்கு ஒய்வு ஏது-உறக்கம் ஏது ? பத்து-பதினென்று-பன்னிரண்டு எனக் கடிகாரம் அடித்த மணிகளையெல்லாம் எண்ணிக்கொண்டே யிருந் தேன். நள்ளிரவு கடந்த பின் இரவில் அயர்ந்து உறங்கி யிருக்கிறேன்.

காலையில் கதிரவன் காயத் தொடங்கிய பிறகே படுக்கைவிட் டெழுந்தேன். அப்பா வைகறையிலேயே எழுந்துவிடுவது வழக்கம். சில நாட்களில் ஆற்றுக்குப் போய்க் காலைக்கடன்களே முடித்துக்கொண்டு வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/122&oldid=655965" இலிருந்து மீள்விக்கப்பட்டது