பக்கம்:மலர் மணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 121

கான் படுக்கைவிட் டெழுந்தபோது அப்பா வீட்டில் இல்லை. அவர் வெளியிலிருந்து மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தபோது, நான் உடம்பைப் போர்த்தியபடியே பல் துளக்கிக்கொண் டிருந்தேன். அவர் முகத்தில் கோபக் கனல் கொழுந்துவிட் டெரிந்தது. வாயிலிருந்து கடுஞ்சொற்கள் தீப்பொறிகளாகப் பறந்து வந்தன.

“ ஏண்டா இன்னும் போர்த்திக்கொண் டிருக் கிறாய் ? உள்ளதைச் சொல், உடம்பில் என்ன காயம் ?”

“ இராத்திரிதான் சொன்னேன். அப்பா, சைக்கிளி லிருந்து விழுந்துவிட்டேன் என்று.”

‘ தெரியுமடா திருட்டுப் பயலே எவன் அடித்து அனுப்பின்ை ?”

‘அடித்தா ? என்னையா ?”

‘இன்னுமா மறைக்கிறாய் ? இராத்திரி உன் மாமன் உன்னே வீட்டில் கட்டிவைத்து அடித்தான இல்லையா ?” “ மாமன அவர் ஏன் என்னை அடிக்க வேண்டும் ?

S 99

நான் ஏன் அங்கே போகிறேன் !

‘நானும் அதுதான் கேட்கிறேன். எனக்குத் தெரியாமல் நீ ஏன் அங்கே போனுய் ?”

“ நான் போகவில்லை அப்பா ! யார் சொன்னது ?”

‘ எல்லாம் எனக்குத் தெரிந்து விட்டதடா நான் ஆற்றுக்குப் போயிருந்தபோது, நான் இருப்பது தெரியாமல் ஒரு மரத்துக்கு அப்பால் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். அதாவது, உன்னைப் பிடித்துத் தூணில் கட்டிய கால்வருள் ஒருவன் தன் நண்பன் ஒருவனிடம் நடந்த கதையெல்லாம் சொல்லிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/123&oldid=655966" இலிருந்து மீள்விக்கப்பட்டது