பக்கம்:மலர் மணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 123

யிருக்கிருன். இருக்கட்டும்-கான் அவனைப்பழிக்குப் பழி

வாங்காவிட்டால் என்பெயர் அம்பலவாணன் அல்ல.”

“வேண்டாமப்பா வேண்டாம். மாமா ைவ மன்னித்து விடுங்கள். என்றைக் கிருந்தாலும் நீங்கள் இருவரும் மைத்துனர்கள் தானே. இனியும் முட்டி மோதிக் கொள்ளாமல், இதோடு விட்டு விடுங்கள். நம் மாமாதானே என்ன அடித்தார். நான் உங்களை அறியாமலும் அவரை அறியாமலும் அல்லியை விரும் பினேன். என் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை கிடைத்து விட்டது. இனிமேல் நான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன். இதை இனி மறந்து விடுங்கள் அப்பா ’.

‘ மறந்து விடுவதா! நீ செய்த குற்றத்துக்கு அவன் தண்டனை கொடுத்தான். அவன் செய்த குற்றத்துக்கு நான் அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டு மல்லவா!’ என்று சொல்லி அப்பா தோட்டத்துக்குப் போர்ை. இதை யறிந்த அம்மாவும் கற்பகமும் அலறித் துடித்தார்கள்-அழுது புலம்பிக் கண்ணிர் வடித்தார்கள். என் காயங்களில் ஏதேதோ தடவினர்கள். உடம்புக்கு ஒத்தடம் கொடுத்தார்கள். வாய்ச்சண்டை போட்டுக் கொள்பவர்கள் ‘உடம்பு ஒத்தடம் கேட்கிறதா?’ என்று ஒருவரை யொருவர் விடைப்பது உலகியல். அந்த வைபவம் இப்பொழுது எனக்கு நடந்தே விட்டது.

கொஞ்ச நேரத்தில் குல்லுகபட்டர் குருசாமி வந்தார். இன்றைக்கு நடக்கவிருந்த பரியம் நின்று விட்டது-இனி ஆகவேண்டிய காரியத்தைக் கவனிக்க வேண்டுமென்று அப்பாவுக்கு நினைவு படுத்தினர். கலிங்கநத்தம் மாப்பிள்ளே வீட்டிற்குச் சென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/125&oldid=655968" இலிருந்து மீள்விக்கப்பட்டது