பக்கம்:மலர் மணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ‘மலர்

முத்தைய முதலியாரைச் சந்தித்து, கற்பக்த்துக்கும் இன்சுபெக்டர் பாண்டியனுக்கும் என்றைக்குப் பரிய விழா செய்யலாம் என்று நாள் குறித்து வா!’ என்று சொல்லி அப்பா குருசாமியை அனுப்பிவைத்தார்.

அன்று பகலெல்லாம் அப்பா அதிகம் விடு தங்க வில்லை. என்னவோ ஏற்பாடு செய்துகொண்டிருப்பவர் போல் தோன்றியது. நாட்டாண்மைக்காரர் ஆதலால், ஊர்க்காரியம் ஏதோ பார்க்கிறார் என்று நாங்கள் எண்ணிக்கொண் டிருந்தோம். -

அன்று முன்னிரவு ஒன்பதுமணியளவில் ஒரு முரடன் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் வெற்றி விருதுகள் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போன்ை. அவர்களின் பேச்சைக் கொண்டு, ந ட ந் த ைத நன்றாக நான் விளங்கிக் கொண்டேன்.

அப்பாவின் ஏற்பாட்டின்படி, பத்துப் பதினேந்து குண்டர்கள் இருட்டினதும் மாமா வீட்டிற்குச் சென்று அவரைத் தா க் க முயன்றிருக்கிறார்கள். இதை ஏற்கெனவே எதிர்பார்த்த மாமா, முன்கூட்டியே தாமும் பத்துப் பன்னிரண்டு ஆட்களேத் தயார்பண்ணி வைத் திருக்கிறார். இருதரப்பினரும் கை கலக்கக் கடும்போரே நடந்திருக்கிறது. வெற்றி தோல்வி யார் யாருக்கோ !

அப்பாவும் மாமாவும் பகைத்துக் கொள்ள, அவர் களுக்காக அயலார்கள் அடித்துக்கொள்வது எவ்வளவு அறியாமை. கொண்டானும் கொடுத்தானும் சம்பந்தி, குறுக்கே இருந்தவன் அம்பலம் என்பார்களே! இவர் களுக்கு ஏன் இந்த வம்பு ! காசுக்காக உதைவாங்க வேண்டுமா ? பணக்காரப் பேய்களைத்தான் எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/126&oldid=655969" இலிருந்து மீள்விக்கப்பட்டது