பக்கம்:மலர் மணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மலர்

செய்திருப்பார் என்று பாண்டியன் நினைத்துக்கொண் டிருந்தார். மாயாண்டிக்கு ஆள் அனுப்பிய பின்பு, மகனே நேரில் கண்டு விவரம் தெரிவிப்பதற்காக முத்தைய முதலியார் கோட்டைத்தளம் சென்றார்,

‘மாயாண்டி முதலியாரின் மகளே நிறுத்திவிட்டு, முதலில் பார்த்துவந்த அம்பலவாண முதலியார் மகளேயே மீண்டும் ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று தந்தை மைந்தனிடம் தெரிவித்தார். அது முடியாது; எனக்கு மாயாண்டி மகள் அல்லியேதான் வேண்டும்’ என்று பாண்டியன் அடம்பிடித்தார். “முதலில் அம்பல வாண முதலியாருக்கே வாக்கு கொடுத்திருந்ததால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று துணிந்துவிட் டேன்; மேலும் அவர் தம் சொத்தில் பாதியை உனக்கு எழுதிவைப்பதாகச் சொல்லுகிறார் மாயாண்டி இவ் வளவு தருவதாகச் சொல்லவில்லை. ஆதலால் நாம் இந்த வாய் ப் ைப நழுவ விடக்கூடாது. என் பே ச் ைச மறுக்காமல் ஒத்துக்கொள்” என்று முத்தைய முதலியார் மகனுக்கு எ வ் வள வோ சொன்னர். அவ்வளவும் செவிடன் காதில் ஊதிய சங்கு ஆயிற்று. ‘கற்பகத்தைவிட அல்லிதான் அழகில் சிறந்தவள். எனக்குச் .ெ சா த் து வேண்டாம். கண்ணுக்கு நிறைந்த மனேவியே வேண்டும். அம்பல வாண முதலியார் தம் சொத்து முழுவதையுமே எழுதி வைப்பதர் யிருந்தாலும் அவர் மகள் கற்பகம் எனக்கு வேண்டவே வேண்டாம். மாயாண்டி முதலியார் ஒன்றுமே கொடுக்கவில்லே யாலுைம், என் சொத்து முழுவதையும் கான் அவருக்குக் கொடுத்தாவது, அவருடைய அழகு மகள் அல்லியைத்தான் மணந்து கொள்வேன். இதில் யாரும் குறுக்கிட வேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/128&oldid=655971" இலிருந்து மீள்விக்கப்பட்டது