பக்கம்:மலர் மணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 131

அவருக்குக் காஃபி கொண்டுவந்து கொடுக்கும்படியாக வும் அப்பா ஆணை போடுகிறார். நான் ஒரு நாளும் கொடுப்பதில்லை. அந்த வேலையை அம்மா தலையில் விடியவைத்து விடுவேன்.

பாண்டியன் வீட்டிற்கு வந்துபோவதைப்பற்றிக் கேள்விப்பட்டால் நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைப் பீர்களோ என்று அஞ்சினேன். அதற்காகவே தங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்றுகூட என்றைக்கோ எண்ணினேன். இருப்பினும், நீங்கள் என் உறுதியில் ஐயப்பட மாட்டீர்கள் என்று தெளிங் தேன். அல்லி ! உன்மேல் எனக்கு உள்ள உறுதியில் உனக்கு நம்பிக்கை யில்லையா ? உன்மேல் நான் ஐயப் படுவேன் என்று என்மேல் நீ எப்படி ஐயப்படலாம்?” என்று என்மேல் நீங்கள் சினங்கொண்டால் என்ன செய்வது என்று அஞ்சியும் கடிதம் எழுதாமல் சும்மா இருந்தேன். இருந்தும் இப்பொழுது எழுதவேண்டி வந்துவிட்டது.

பாண்டியன் தகப்பனர் முத்தைய முதலியார் வேறு வழியில்லாமல் மகனுடைய விருப்பத்துக்கு ஒத்துக் கொண்டார். பாண்டியன் என்னை மணந்துகொள்வ. தென்று முத்தைய முதலியாரும் அப்பாவும் மீண்டும். முடிவுசெய்து உறுதி எடுத்துக்கொண்டார்கள். முன்பு ஒரு முறை பரிய விழா தவறிவிட்டதால், இனி மீண்டும் ஒருமுறை அந்தச் சடங்கைச் செய்யவேண்டிய தில்லை. வாய் உறுதியே போதும். ஒரேயடியாகத் திருமணத்திற்கே நாள் குறித்து கடத்திவிடலாம் என்று ஏற்பாடு செய்துகொண்டார்கள். மேலும், திருமண மாதங்களாகிய சித்திரை வைகாசி வரும்வரை காத்துக் கொண்டிருக்கவும் தேவையில்லே பங்குனி பத்தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/133&oldid=655977" இலிருந்து மீள்விக்கப்பட்டது