பக்கம்:மலர் மணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. மணம் 133

பெருத்த மானக்கேடா யிருக்கிறது. பெண்ணேப் படிக்க வைத்ததினுல்தான் தகப்பன் சொல்லைத் தட்டிப் பேசு கிருள் என்று ஊரார் தூற்றிப் பேசுவார்கள். அதனுலே, நான் சொல்வதைத் தட்டாதே அல்லி” என்று அப்பா என்னேக் கெஞ்சினர். அவர் சுருதி இறங்கிவிட்டது.

அப்பா கெஞ்சத் தொடங்கவே, நான் மிஞ்சத் தொடங்கினேன். ‘ என்னைப் பாண்டியனுக்குக் கட்டிக் கொடுத்து அணு அணுவாகக் குத்திக் கொல்வதற்கு முன் நானே ரயிலடியில் விழுந்து மாண்டு போகிறேன்.” என்று சொல்லி நகர்ந்தேன்.

அப்பாவின் முகத்தைப் பார்க்க என்னவோபோல் இருந்தது. பெருத்த ஏமாற்றமும் ஏக்கமும் தென் பட்டன. பழைய கடுமை-கண்டிப்பு-கொடுமைகோபம் எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை. குழந்தைபோல் தேம்பினர். ‘ அல்லி ! நீ ரயிலடியில் விழுந்து இறக்க வேண்டாம். அதற்காகவா கான் உன்னைப் பெற்று வளர்த்தேன் ? நீ உன் அத்தானேயே மணந்துகொண்டு மனம்போல் வாழு ஆல்ை, வாக் குறுதி மீறியவன்’ என்ற பட்டத்தை எனக்குச் சூட்டி, எனக்கு ஏட்டிக்குப் போட்டியாக என் எதிரியின் மகனே நீ மணந்துகொள்ளப் போவதைப் பார்த்துக்கொண் டிருக்க ஒருகாலும் என் மனம் இடந்தராது. இதோ நான் போய் ரயிலடியில் விழுந்து இறந்து விடுகிறேன். ‘ என்று சொல்லிப் பைத்தியம் பிடித்தவர்போல் ஒடத் தொடங்கினர். “ வேண்டாமப்பா, வேண்டாமப்பா ” என்று சொல்லி நான் ஒடி அவர் கையைப் பிடித்துக் கொண்டேன். அம்மா ஒரு கையைப் பிடித்துக்கொண் டார்கள். இருவரும் இழுக்க முடியாமல் இழுத்துவந்து சாய்வு நாற்காலியில் படுக்கச் செய்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/135&oldid=655979" இலிருந்து மீள்விக்கப்பட்டது