பக்கம்:மலர் மணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மலர்

இந்த நிலையில், ஒரு பெண் மனம் எப்படியிருக்கும்என்ன பாடு படும் என்று நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள் அத்தான் ! அப்பாவை நிறைவு செய்வதா ? என் மனத்தை நிறைவு செய்வதா? பெற்றாேர் விருப் பத்தையே பெரிதாகப் பேணி நிறைவேற்றுவதே பிள்ளைகள் கடமை என்று நீங்களே ஒரு முறை உரைத் திருக்கிறீர்களே! இதன்படி பார்த்தால், எனக்குக் கடமை பெரிதா ? காதல் பெரிதா ? கடமை தவறில்ை காதல் கைகூடும்-காதலைத் தியாகம் செய்தால் கடமை நிறைவேறும். இரண்டினுள் ஒரு பெண்ணுக்கு எது இன்றியமையாதது ? இரண்டையும் எடைபோட்டுப் பார்த்தேன். துல்லியமாக நிறுத்து ஒரு முடிவுக்குவர முடியாமல் தவித்தேன். ஒரு சமயம் இந்தத் தட்டும் மறுசமயம் அந்தத் தட்டும் மாறி மாறித் தாழ்வதும் எழுவதுமாக இருந்தன. ஒருவரை மனத்தில் மன வாளனுக வரித்துக்கொண்ட பிறகு, செடிக்குச் செடி ஆடு தாவுவது போன்று அவரைக் கைவிட்டு வேறொருவரிடம் தாவுவது கற்புக்கு இழுக்கு-இது வேசியரின் செயல் என்று ஒருசமயம் எண்ணுவேன். தன்னலத்திற்காகதன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தன் தந்தையை-தன்னைப் பெற்று வளர்த்துப் பெண்ணுக்கி விட்ட பெரியவரைச் சாகக்கொடுப்பது அதனினும் இழுக்கு-கொடுமையிலும் கொடுமை என்று மறுசமயம் எண்ணுவேன். இவ்விதம் மாறிமாறி எழுந்த எண்ணச் குருவளி சுழன்று சுழன்று . என்னேப் பந்தாடியது. உணர்ச்சி அலைகளால் எத்துண்டு மொத்துண்டு துரும் பெனத் தத்தளித்தேன். பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

மன்னிக்க வேண்டும் அத்தான், மன்னிக்க வேண்டும். வெகுநாளாக விடியாதிருந்த ப்ொழுது விடியத் தொடங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/136&oldid=655980" இலிருந்து மீள்விக்கப்பட்டது