பக்கம்:மலர் மணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 135

விட்டது; விடிவெள்ளி முளைத்தாயிற்று. புயல் தணிந் தது; புழுதி யடங்கிற்று. ஆலேயில் அகப்பட்ட கரும் பெனக் கசங்கிய என் நெஞ்சம் இப்பொழுது நிறைமதி யென நிறைவு பெற்று விட்டது. ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் அத்தான், ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். தன்னலத்தைவிட பிறர் நலமே பெரிது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்-பிள்ளையின் விரு ப் பத் தை விட பெற்றாேர் விருப்பமே பெரிது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்-காதலைவிட கடமையே பெரிது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவருக்கு வாக்குக் கொடுத்து விட் டேன் அத்தான், வாக்குக் கொடுத்து விட்டேன். பாண்டியனுக்கும் அல்லிக்கும் பங்குனி மாதம் பத்தாம் தேதி திருமண்ம். உங்களால் இதனே நம்ப முடிய வில்லையா அத்தான் ? ஆம், எப்படி வாக்குக் கொடுத் தோம் என்று என்னுலேயே நம்ப முடியவில்லைதான். இருந்தாலும் இது நடக்கப்போகிற உண்மை-இமாலய உண்மை எனவே, என்னை மன்னித்து விடுங்கள் அத்தான். இதல்ை நம் அன்பு குறைந்துவிட வேண்டாம். என்றைக்கிருந்தாலும் நாம் அத்தை பிள்ளை-அம்மான் பிள்ளையல்லவா ? நீங்களும் என்னைப்போலவே ஒரு பெண்ணுயிருந்திருந்தால், அல்லது நானும் உங்களைப் போலவே ஓர் ஆணுயிருந்திருந்தால், நமக்குள் ம்ாமன் -மச்சான் அல்லது மைத்துணிகள் என்ற உறவும் பற்றும் எந்த அளவு இருக்குமோ அந்த அளவு தொடர்பு எப் போதும் இருக்கட்டும். இதைத் தான் நான் தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நம் காதல் உறவிலிருந்து விடை பெற்றுக் கொள்ளத் தங்கள் ஒப்புதலை வேண்டுகிறேன். வணக்கம். இப்படிக்கு,

அல்லி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/137&oldid=655981" இலிருந்து மீள்விக்கப்பட்டது