பக்கம்:மலர் மணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மலர்

நோக்கியபோது தந்தையின் எழுத்தாகத் தெரிய

வில்லை. அவ்வெழுத்தினுள் ஓர் ஏந்தெழில் மங்கை தென்

பட்டாள். ஆம், அது ஒரு பெண்ணின் எழுத்துத்தான்;

அழகிய பெண்ணின்-அறிவுள்ள பெண்ணின் எழுத்துத்

தான். ஒருவரின் எழுத்தைக்கொண்டு அவருடைய

அழகினையும் அறிவினையும் அளவிட முடியுமா? அழகும்

அறிவும் நிரம்பப்பெற்றில்லாத நண்பர்கள் சிலர், அழ

கான எழுத்து எழுதுவதை யான் அறிவேன். அவை

பெற்றுள்ள சிலரது எழுத்து அருவருப்பாக இருப்பதும்

எனக்குத் தெரியும். எழுத்தின் அழகைப்பற்றி இள

மையில் கவலைப்படாதிருந்த காந்தியடிகள், பின்னர்

அதன் இன்றியமையாமையை உணர்ந்ததாகத் தம் வர

லாற்றில் எழுதியுள்ளார். ஆல்ை இது டாக்டர்களுக்கு

மட்டும் விதிவிலக்காகும். எவ்வளவுக் கெவ்வளவு புரி

யாமல் எழுதுகிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு பெரிய டாக்டர்கள் என்பது பொருள்போலும் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர் மருந்து எழுதித்தர, எழுத்துப் புரியாத மருந்துக் கடைக்காரர்

வயிற்றுப்போக்குப் போவதற்கு உரிய ம ரு ங் ைத க்

கொடுத்துவிடின், நோயாளி ஒரே போக்காகப் போய்’ விடுவானே என்பதை எண்ணும்போதுதான் எழுத்தின் அருமை புரிகிறது !

அந்த ஏங்தெழில் நங்கையின் எழுத்து அத்தகைய தன்று. அவளைப் போலவே அவள் எழுத்தும் அழகியது. அவ்வெழுத்தைக் கண்டோர் எழுதியோரையும் காணத் துடிப்பர். அவ்வெழுத்தில் விரைவோட்டம் தென் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/14&oldid=655984" இலிருந்து மீள்விக்கப்பட்டது