பக்கம்:மலர் மணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மலர்

குடும்பங்களுக்கிடையே தொடர்ந்து ஏற்படவிருந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் மகிழ்ந்தேன்.

அல்லிக்குத் திருமணம் கூடியதற்காக நான் மகிழ் கிறேன் என்பதல்ை, அவள் மேல் எனக்குப் பற்றில்லை என்று பொருளில்லை. அவளே மணந்து கொள்வதில் எனக்குக் கொள்ளே விருப்பம். அதற்காக முயன்றும் பார்த்தேன்; முடியவில்லை. அதற்கு மேல் என்ன செய் வது முயன்றால் முடியாததில்லை என்பார்கள் சிலர். ‘முடியாது’ என்ற சொல்லே அகராதியிலிருந்தே எடுத்து விட வேண்டும் என்று நெப்போலியன் சொன்னதாக அவர்கள் கூறுவர். இருக்கலாம்; ஆல்ை, முயற்சிக்கும் ஒர் எல்லே யுண்டு. நாம் எந்தப் பொருளுக்காக முயலு கிருேமோ, அந்தப் பொருளின் இன்றியமையாமை.-- கட்டாயத் தேவை முதலியவற்றைப் பொறுத்தே முயற்சி யின் அளவும் எல்லையும் இருக்க வேண்டும். வானத்தி லுள்ள முழுமதியைப் பிடித்துக்கொண்டு வர முயலுவது முட்டாள்தனமல்லவா ? அல்லது ஒரு கடையில் தன்னக் கவர்ந்த-தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஒரு மலரையோ அல்லது ஒரு கனியையோ தான் வாங்கப் போனபோது, தனக்கு முன் வேறொருவன் அதனே வாங்கிக்கொண்டு போய்விடின், எனக்கு வேறு மலரோ -கனியோ வேண்டாம், அதுவேதான் வேண்டும் என்று அடம்பிடித்துச் சிறுபிள்ளைத்தனம் செய்வது அதனினும் முட்டாள்தனமல்லவா ?

அல்லியைத் தவிர வேறு மணந்துகொள்ள மாட்டேன் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அது அறிவுடைமையாகுமா? அவளைத் தவிர வேறு பெண்களே உலகில் பிறக்கவில்லையா ? ஒருவேளை அல்லியே பிறந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/140&oldid=655985" இலிருந்து மீள்விக்கப்பட்டது