பக்கம்:மலர் மணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

அல்லி இப்பொழுது திருமணமானவள். நான் முன் போல் அவளைப் பார்க்க முடியாது-அவளிடம் பழகவும் முடியாது. அவள் கணவன் கண்டிப்பான பேர்வழியாயும் இருக்கலாம். இப்போது தாய் வீட்டில் இருப்பாளா.-- அல்லது கணவன் விட்டில் இருப்பாளா? எங்கேயாவது இருக்கட்டும். எப்படியாவது அவள் நல்ல விதமாக வாழ்ந்தால் போதும். அவளேப்போலவே, கும் மணம் செய்து வைத்து விட்டால் என் கவலை நீங்கி விடும். இவ்வாறு எண்ணியபடியே பயணம் செய்தேன்.

புகைவண்டி வழியில் விழுப்புரம் சந்திப்பில் அரை மணி நேரம் நின்றது. வண்டியில் என் பக்கத்தில் அமர்ந்துகொண்டு வந்த ஒருவர், தம் பொருள்களையும் தர்ம் உட்கார்ந்திருக்கும் இடத்தையும் சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படி என்னிடம் சொல்லிவிட்டு, தேநீர் அருந்துவதற்காகக் கீழே இறங்கிச் சென்றார். அவரால் என்னிடம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட அந்த இடத்தில், புதிய இளைஞர் ஒருவர் ஏறி உட்கார வந்தார். அந்த இளைஞர் என்னைப் போலவே வாட்ட சாட்டமா யிருந்தார். “இது மற்றாெருவருடைய இடம்; அவர் தேநீர் பருகச் சென்றுள்ளார், தயவு செய்து இவ்விடத் தில் உட்கார வேண்டாம்” என்று நான் வந்தவரைக் கேட்டுக் கொண்டேன். “இது அவருடைய இடம் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா ? இந்த இடத்தை அவர் கிரயம் செய்துகொண்டாரா? போய்யா போ! காலியா யிருக்கிற எந்த இடத்திலும் எவர் வேண்டுமானலும் உட்காரலாம்” என்று சொல்லிக்கொண்டே வந்த இளைஞர் வகையாக உட்கார்ந்து விட்டார். நான் மேலும் சிறு எதிர்ப்பு தெரிவித்தேன். அவர் ஒன்று சொல்ல-நான் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/143&oldid=655987" இலிருந்து மீள்விக்கப்பட்டது