பக்கம்:மலர் மணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 145.

கொண்டிருந்தாராம். அப்போது வழியில் ஓர் ஊரில் அவருடைய நண்பர் ஒருவர் வந்து வண்டியில் ஏறின. ராம். அவர்களுக்குள் ஏதோ பேச்சு நடந்திருக்கிறது:

‘ வாங்க சின்னசாமி செட்டியார்வாள் ! எவ்வளவு: தூரம் போகிருப் போலே ?” -

‘ வருகிறேன் மாயாண்டி முதலியார்வாள் ! நான் கலிங்கநத்தம் வ ைர யு ம் போகிறேன். முதலியார் எவ்வளவு தூரம் போகிருப்போலே?”

“ நான் செங்கல்பாளேயத்துக்கு என் தம்பியைப் பார்த்துவிட்டு வரப் போகிறேன். கலிங்கநத்தத் துக்குச் செட்டியார்வாள் என்ன வேலையாய்ப் போகிருப் போலே?” -

“ நானு ? கலிங்கருத்தத்தில் என் தங்கை வீட்டுக்குப் போகிறேன். பர்மாவிலிருந்து வந்து கலிங்க நத்தத்தில் குடியேறியிருக்கிருரே முத்தையன்-அவரை உங்களுக்குத் தெரியுமா ? அவர்தான் என் தங்கை கணவர். ஒரு காரியமாக அவரைப் பார்க்கத்தான் போகிறேன்.” -

‘ என்ன, முத்தையன ? எந்த முத்தையன் 2

“ எந்த முத்தையன ? கலிங்கருத்தத்தில் எத்தனை முத்தையன் இருக்கிறார்களோ ? ஏன், உங்களுக்கு யாரையாவது தெரியுமா ?” - .

‘’ ஒரு முத்தையனேத் தெரியும். அவர் பிள்ளையின் பெயர் பாண்டியன். அந்தப் பிள்ளை போலீசு இன்சு பெக்டராக இருக்கிறார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/147&oldid=655991" இலிருந்து மீள்விக்கப்பட்டது