பக்கம்:மலர் மணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மலர்

“ஆமாம் ஆமாம், அதே முத்தையன்தான் என தங்கையின் கணவர் ‘

“என்ன! உம் தங்கை கணவரா? நீங்களோ செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். அவரோ முதலி யார் இனத்தைச் சேர்ந்தவர்-அதாவது எங்கள் இனத் தைச் சேர்ந்தவர். அவரை நாங்கள் முத்தைய முதலியார் என்றுதான் அழைப்பது வழக்கம். அவர் எப்படி உமக்கு மைத்துனராக இருக்க முடியும்? இருவரும் வெவ்வேறு குலத்தவ ராயிற்றே !’ - * *

“ அதுவா, அது ஒரு தனிக் கதை. ”

‘ என்ன அது ?”

‘முத்தைய முதலியார் பர்மாவில் இருந்தபோது என் தங்கையைக் காதலித்துக் கலப்புமணம் ச்ெய்து கொண்டார். தங்கையென்றால், உடன் பிறந்த சொந்தத் தங்கையல்லள்-என் பெரியப்பா மகள். என் பெரியப்பா மட்டும் முதலில் இந்தக் கலப்பு மணத்துக்கு, ஒத்துக் கொள்ள வில்லையாம். பிறகு வெளிநாட்டில் வேறு 5T6T செய்வது? இருக்கிறதமிழர்களுக்குள் சாதி வேற்றுமை பாராட்டாமல் மணந்துகொள்ள வேண்டியதுதானே ? இதில் தவறு ஒன்றுமே இல்லையே கலப்பு மணம் செய்துகொண்டாலும் நலமாகவே வாழ்ந்துவந்தார் களாம். இரண்டாவது உலகப் பெரும் போர் நடந்த பொழுது, இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, மனைவியையும், சிறுவன் பாண்டியனையும் அழைத்துக் கொண்டு முத்தைய முதலியார் நம் நாட்டுக்கு வந்து விட்டார். தம் முன்னேர்களின் ஊராகிய கலிங்க நத்தத்திலேயே குடியேறினர். பையன் பாண்டியனையும் படிக்கவைத்து நல்ல நிலக்குக் கொண்டுவந்துவிட்டார். இதுதான் அவர் வரலாறு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/148&oldid=655992" இலிருந்து மீள்விக்கப்பட்டது