பக்கம்:மலர் மணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மலர்

ஆதலால், தொடக்கத்தில் சில நாட்கள் விறுவிறுப் பாகவே கழிந்தன. தாய் தந்தையரோடும் தங்கை யோடும் அளவளாவுவதும், நண்பர்களோடு உரையாடி மகிழ்வதும், ஊரின் சுற்றுப்புறத்துள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு சுவைப்பதுமாகச் சில நாட்கள் வாழ்க்கையை இன்பமாகக் கழித்தேன். இரவு பகலாகக் கண்விழித்துப் பாடுபட்டுப் படித்துத் தேர்வு எழுதிய எனக்கு இந்த ஓய்வும் உவகையும் தேவைதானே ! இடையிடையே அல்லியைப் பற்றிய நினைவும் நெஞ்சை உறுத்தத் தொடங்கியது.

ஒருநாள் மாலை உலாத்துவதற்காக வெளியில் சென் றிருந்தேன். அப்போது வழியில் ஒருவன் வந்து வம்புக் கி ழு த் தா ன். வாய்ச்சண்டையா யிருக்கும்போதே முதலில் அவன் என்னைக் கைதீண்டி விட்டான். நான் விடுவேன ? பதிலுக்கு ஒர் அறை அறைந்தேன். ஒர் அறைக்கே அவன் குய்யோ முறையோ என்று கத்தி, கொல்கிருனே-கொல்கிருனே என்று கூவிக்கொண்டே கீழே விழுந்துவிட்டான். என்மேல் ஏதாவது பழிசுமத்த வேண்டுமென்று திட்டமிட்டு அவன் வேண்டுமென்றே கீழேவிழுந்தது போல் எனக்குத் தோன்றியது. இல்லா விடின், ஓர் அறை கொடுத்ததுமே, கொலை செய்வதாக அவன் கூவியிருக்க வேண்டியதில்லை. ஓர் அறையைக் கூட தாங்கமுடியாத அளவுக்குக் கையாலாகாதவன் என்னிடம் வம்புக்கே வந்திருக்க வேண்டியதில்லையே ! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கவேண்டுமென்று என் மனம் எண்ணியது.

இந்த நேரத்தில், ‘யாரது சண்டை போட்டுக் கொள்வது ? யாரோ யாரையோ கொல்லுவதாகக் கூச்சல் கேட்டதே அந்தக் கொலைத் தொழில் செய்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/150&oldid=655995" இலிருந்து மீள்விக்கப்பட்டது