பக்கம்:மலர் மணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 151

“ அப்படி யொன்றும் அல்லியை நான் மயக்கவும் இல்லை-உம்மை மணக்காதபடிக் கெடுக்கவும் இல்லை. இன்னும் கேட்டால், அவள் உம்மை மணந்துகொள்ளும் படியாக அறிவுறுத்தியும் இருக்கிறேன். என்ன காரணத் தாலோ உங்கள். திருமணம் கைகூட வில்லை யென்றால், அதற்கு நான் என்ன செய்வது ?”

“ தெரியுமடா உன்னை, திருட்டுப் பயலே! குடி கேடா ஒரு குடும்பப் பெண்ண்ே இப்படித்தான் கலைப் பதா? நடக்கவிருந்த திருமணத்தை இப்படித்தான் முறிப்பதா ? அயோக்கியப் பயலே ! இதுபோல் இன்னும் எத்தனை குடும்பங்களைக் கெடுத்திருக்கிறாய்?”

‘ குடும்பங்களைக் கெடுக்கிற வேலை எனக்கில்லை. இன்சுபெக்டர் அவர்களே மரியாதையாகப் பேசும். நானும் உம்மைப்போல் மனிதன்தான் ! எனது பொறுமைக்கும் எல்லே உண்டு.”

‘ என்னடா எதிர்த்துப் பேசுகிறாய் ! இந்தா வாங்கிக்கொள் ‘ - -

என்று சொல்லிக் கொண்டே, பாண்டியன் என் கன்னத்தில் பளிர் என ஒர் அறை விட்டார். எங்கள் இருவரைத் தவிர அந்த அறையில் வேறு யாரும் இல்லை. போலீசு காவலர் சிலர் வெளியில் இருக்கிறார்கள். என்னைத் தாக்குவதற் கென்றே பாண்டியன் இந்த ஏற்பாடு செய்து தனியறையில் தள்ளிக்கிொண்டிருக் கிறார் என்பதை உணர்ந்தேன். நான் அவரிடம் அடிபட வேண்டிய காரணமே இல்லை. தண்டனைக்கேற்ற குற்றம் நான் எதுவும் செய்திருக்கவில்லை. இந்த நிலையில் என் கன்னத்தில் அறை விழுந்திருக்கிறது. இப்பொழுது நான் செய்ய வேண்டுவது என்ன ? விழப்போகும்

1()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/153&oldid=655998" இலிருந்து மீள்விக்கப்பட்டது