பக்கம்:மலர் மணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 153

முதல் அறை எனது இடக் கன்னத்தில் விழுந்தது -இரண்டாவது அறை வலக்கன்னத்தில் விழுந்ததுஇனி முன்றாவது அறை எனது முறை. பாண்டியனது கன்னத்தில் பதில் அறை அறைந்தேன். உதைகளும் குத்துகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன-இருவரும் கட்டிக்கொண்டு உருண்டு புரண்டோம் - ஒருவரை யொருவர் தூக்கி எறிந்தோம். * -

ஒரு போலீசு இன்சுபெக்டரை, போலீசு நிலையத் திலேயே இப்படித் தாக்குவேன் என்று நானும் எதிர் பார்க்கவில்லை - பாண் டி யனும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பாண்டியனைப் போலவே நானும் நல்ல கட்டுள்ள இளைஞன். இளமையிலிருந்தே உடற்பயிற்சி செய்து உரமேறி யிருந்தது என் உடல். ஒரு போலீசு இன்சுபெக்டருக்கு இருக்கவேண்டிய உடலமைப்பு முழுதும் எனக்கும் உண்டு. இன்னும் கேட்டால், பாண்டியனேவிட மல்லன் என்றே என்னைச் சொல்ல லாம். எதிர்பாரா விதமாய் என்னிடம் அகப்பட்டுக் கொண்டு அவர் திணறிவிட்டார். ‘ஓடி வாருங்கள்-ஓடி வாருங்கள் என்று உதவிக்குத் தம் துணையாட்களைக் கூவியழைத்தார்.

சும்மா சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு சில காவலர் உள்ளே ஓடிவந்தனர். இவனைப் பிடித்துக் கட்டுங்கள் என்று இன்சுபெக்டர் ஆணையிட்டார். யாரும் என்னருகே நெருங்கவில்லை. மீண்டும் மீண்டும் அவர்களே வற்புறுத்தினர். அவர்கள் அசையவில்லை. ‘கோழைகளே பயந்தாங் கொள்ளிகளே ! ஒருவனைப் பிடித்துக்கட்ட இத்தனை பேரால் முடியாதா?’ என்று இடி முழக்கம் செய்துபார்த்தார். ஒன்றும் கடக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/155&oldid=656000" இலிருந்து மீள்விக்கப்பட்டது